இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு
மும்பை : சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வருவதை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.52.73 ஆக உள்ளது. பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிந்தே காணப்படுவதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய வர்த்தக நேர இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா உயர்ந்து ரூ.52.98 ஆக இருந்தது.www.goldennifty.com
No comments:
Post a Comment