பங்கு வர்த்தகம் மீண்டும் கரடியின் பிடியில்
டிசம்பர் தொடங்கியதை அடுத்து, பங்குச் சந்தையில் வசந்த காற்று வீசும் என, பலராலும் நம்பப்பட்டது. இதனால், கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 1,100 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்திருந்தது. ஆனால், ஐரோப்பிய நிலவரங்கள் சரியில்லாததாலும், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்க்கப்பட்டது போல் இருக்காது என்ற மத்திய அரசின் அறிவிப்பாலும் நடப்பு வாரத்தில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நடப்பு வாரத்தில், செவ்வாயன்று முகரம் பண்டிகையை முன்னிட்டு, பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. ஆக, நான்கு நாள் வர்த்தகத்தில், புதன்கிழமை தவிர்த்த ஏனைய வர்த்தக தினங்களில், பங்கு வியாபாரம் மிகவும் ஆட்டம் கண்டது.
வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 274 புள்ளிகள் சரிவடைந்து, 16,213 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 77 புள்ளிகள் வீழ்ச்சிக்கண்டு, 4,866 புள்ளிகளிலும் நிலைபெற்றன. நடப்பு வாரத்தில் மட்டும்,"சென்செக்ஸ்' மொத்தம் 592 புள்ளிகள் சரிவடைந்து போனது
சாதகமான அம்சங்கள் :
நாட்டின் உணவு பொருள் பணவீக்கம், 44 மாதங்களுக்கு பிறகு, 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலை குறைப்பு மற்றும் ரூபாய்க்கு எதிரான டாலரின் வெளி மதிப்பு உயர்வால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில், லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசின் நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் உயர்ந்துள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இது போன்ற ஒரு சில, செய்திகளே பங்கு வர்த்தகத்திற்கு சாதகமான அம்சங்களாக உள்ளன
பாதகமான அம்சங்கள் :
உள்நாட்டில் வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால், பல இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில், குறைந்த வட்டி விகிதத்தில், கடன் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், உள்நாட்டில் அமெரிக்க டாலருக்கு பற்றாக்குறை உள்ளது. இதுவும், நாட்டின் வளர்ச்சிக்கு பின்னடவை ஏற்படுத்தும்.
நம் நாட்டிற்கு, ஐரோப்பிய நாடுகள் முக்கிய ஏற்றுமதி மண்டலங்களாக திகழ்கின்றன. அங்கு, நிலைமை சரியில்லாததால், அது நாட்டின் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், டாலருக்கு எதிராக ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்து வருகிறது. இதனால், இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.
பங்குகளின் விலை :
ஒட்டுமொத்த அளவில், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக உள்ளது என்றாலும், நடப்பு வாரத்தில், ஒரு சில நிறுவன பங்குகளின் விலை அதிகரித்திருந்தது. இவ்வகையில், யுனைடெட் புருவரீஸ் நிறுவனப் பங்கின் விலை, 15 சதவீதமும், பிபாவ் ஷிப்யார்டு நிறுவன பங்கின் விலை, 12 சதவீதமும் அதிகரித்திருந்தது. இவை தவிர, ஜெயபிரகாஷ் பவர் (7 சதவீதம்), அம்புஜா சிமென்ட்ஸ் (7 சதவீதம்) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்திருந்தது. மேலும், ஒரு சில சாப்ட்வேர் நிறுவனப் பங்குகளுக்கும் தேவை காணப்பட்டது.
வரும் வாரம் எப்படி இருக்கும்? :
தற்போதைய நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலவரங்கள், மிகவும் மோசமாகவே உள்ளது. எனவே, வரும் வாரம் பங்குச் சந்தைக்கு பாதகமாகவே இருக்கும். குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' மீண்டும், 16,000 புள்ளிகளுக்கும் கீழ் செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது.
Vantastic article for the right time given . Its very useful to me.
ReplyDeletethanks a lot.... very useful tips
ReplyDeletethis share market sensex tips very useful to me. and thanx to goldennifty
ReplyDelete